ENGLISH
  • English
  • Tamil
  • Sinhala

எமது அணுகுமுறை

நிதிக்கொடைகளை வழங்கும் ஒரு நிறுவனமாக இருப்பதற்கும் அப்பால், ஒரு அர்ப்பணிப்புள்ள பங்காளராகச் செயற்படுவதையே NTT நோக்கமாகக் கொண்டுள்ளது. பாரம்பரிய நிதிக்கொடை வழங்கல் முறையானது, பெரும்பாலும் ஒரு அதிகார மேலாதிக்கத்தையே நிலைநிறுத்துகின்றது; அங்கு வெளிப்புற நிதியளிப்பாளர்கள் சமூகங்களின் மீது தீர்வுகளைத் திணிக்கின்றனர் என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். இதற்கு மாறாக, எமது அணுகுமுறையானது உள்ளூர் தலைமைத்துவம், பங்கேற்பு நடைமுறைகள் மற்றும் மனித உரிமைத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. எமது முன்னெடுப்புகளில் சமூகங்களின் தலைமையிலான செயல்பாடுகளுக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இதன் மூலம், குறிப்பிட்ட பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களே தீர்மானங்களை எடுக்கும் முன்னிலை அதிகாரத்தில் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

நாங்கள் எங்களை வெறும் கட்டுப்பாட்டாளர்களாக  கருதாமல், சமூகங்களின் பங்காளர்களாகவே கருதுகிறோம்; இதற்கமைய, சூழலுக்குப் பொருத்தமானதும் நிலைபேறானதுமான தீர்வுகளைச் சமூகங்களுடன் இணைந்து வடிவமைப்பதற்கு  நாங்கள் பணியாற்றுகிறோம். இத்தகைய கூட்டிணைந்த செயல்பாட்டு முறையானது , நிதி வழங்குநருக்கும் அதைப் பெறுபவருக்கும் இடையிலான வழக்கமான உறவுமுறைக்குச் சவாலாக அமைவதுடன், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வளர்க்கின்றது. இந்த அணுகுமுறையை உள்வாங்குவதன் மூலம், சமூகங்களைப் பலப்படுத்தவும், அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், அதன் ஊடாக இன்னும் நீதியான மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்கப் பங்களிக்கவும் நாங்கள் விழைகிறோம்.

எமது அடிச்சுவடு

இலங்கையின் பல்வேறு பிராந்தியங்களை உள்ளடக்கிய இந்த வரைபடம், ஓர் உள்ளூர் நிதிக்கொடை நிறுவனமாக NTT கொண்டுள்ள செயல்பாட்டுப் பரப்பைச் சித்தரிக்கிறது. சமூக அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் அடிமட்டச் செயற்பாட்டாளர்களுடனான எமது ஆழமான கைகோர்ப்பை இது வெளிப்படுத்துகின்றது. வளங்களைச் சமத்துவமாகப் பகிர்ந்தளிப்பதோடு, பதிலளிக்கக்கூடிய மற்றும் சூழலுக்கு ஏற்ற நிதிக்கொடை அணுகுமுறைகள் ஊடாக சிவில் சமூகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

19 மானியப் பங்காளிகள்

பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | சுகாதார சமத்துவம் | மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் | பராமரிப்பு | குடியுரிமை | பொது நிறுவனங்களும் பொறுப்புக்கூறலும்

11 மானியப் பங்காளிகள்

பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | சுகாதார சமத்துவம் | மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் | பராமரிப்பு | இணைவாழ்வு | விவரிப்புகள் | அறிவு | குடியுரிமை | பொது நிறுவனங்களும் பொறுப்புக்கூறலும்

11 மானியப் பங்காளிகள்

பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | இணைவாழ்வு | விவரிப்புகள் | அறிவு

10 மானியப் பங்காளிகள்

வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | குடியுரிமை | பொது நிறுவனங்களும் பொறுப்புக்கூறலும்

14 மானியப் பங்காளிகள்

வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | சுகாதார சமத்துவம் | மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் | பராமரிப்பு | குடியுரிமை | பொது நிறுவனங்களும் பொறுப்புக்கூறலும்

2 மானியப் பங்காளிகள்

வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | குடியுரிமை | பொது நிறுவனங்களும் பொறுப்புக்கூறலும்

6 மானியப் பங்காளிகள்

பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | சுகாதார சமத்துவம் | மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் | பராமரிப்பு | குடியுரிமை | பொது நிறுவனங்களும் பொறுப்புக்கூறலும்

3 மானியப் பங்காளிகள்

வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | சுகாதார சமத்துவம் | மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் | பராமரிப்பு

11 மானியப் பங்காளிகள்

பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப்பூர்வ நிவாரணங்களை அணுகும் உரிமை | சுகாதார சமத்துவம் | மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் | பராமரிப்பு | வளர்ந்து வரும் சிக்கல்கள் | ஒருமைப்பாடு | இணைவாழ்வு | விவரிப்புகள் | அறிவு

வரைபடத்தைப் பயன்படுத்தி,

இலங்கை முழுவதும் உள்ள எங்கள்

மானியப் பங்காளர்களைப் பாருங்கள்.

பங்காளர் பிணைப்பும் கூட்டிணைவுகளும்

நிதி நடவடிக்கை செயலணி (Financial Action Task Force - FATF) தொடர்பான உலகளாவிய NPO கூட்டிணைவு (Global NPO Coalition)

நிதி நடவடிக்கை செயலணி (Financial Action Task Force – FATF) தொடர்பான உலகளாவிய இலாப நோக்கற்ற அமைப்புகளின்  (NPO) கூட்டிணைவு (Global NPO Coalition) என்பது, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்பு (Anti-Money Laundering – AML) மற்றும் பயங்கரவாத நிதி ஒழிப்பு (Counter-Terrorist Financing – CFT) கொள்கைகளுக்காகக் குரல் கொடுக்கும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் (Nonprofit Organisations – NPOs) ஒரு வலையமைப்பாகும். FATF விதிமுறைகளால் சிவில் சமூகத்திற்கு  ஏற்படும் பாதகமான விளைவுகளிலிருந்து  அவர்களைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாகத் தன்னார்வத் தொண்டுப் பணிகளுக்கு எதிராக ‘பரிந்துரை 8’ (Recommendation 8 – R8) தவறாகப் பிரயோகிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் இக்கூட்டிணைவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றது. FATF NPO கூட்டிணைவு (FATF NPO Coalition) அல்லது சுருக்கமாக NPO கூட்டிணைவு (NPO Coalition) என அறியப்படும் இந்த அமைப்பு, கொள்கை வகுப்பு விவகாரங்களில் FATF உடன் நேரடியாக இணைந்து செயலாற்றுகின்றது.

வறுமை மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் குற்றமாக்கப்படுதலை தடுப்பதற்கான உலகளாவிய இயக்கம் (Global Campaign to Decriminalise Poverty and Status)

வறுமை மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் குற்றமாக்கப்படுதலைதடுப்பதற்கான உலகளாவிய இயக்கம் (Global Campaign to Decriminalise Poverty and Status) என்பது, ஒருவரது சமூக-பொருளாதார நிலை, அடையாளம் அல்லது சமூகச் செயல்பாடுகளுக்காக அவர்களைக் குற்றவாளிகளாக்கும் சட்டங்களையும், நடைமுறைகளையும் ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் சர்வதேசக் கூட்டிணைவாகும். இவ்வியக்கம், காலனித்துவ சட்டங்களான வீதியோரங்களில் தங்குதல் (Vagrancy), பொது இடங்களில் நடமாடுதல். (Loitering), யாசகம் பெறுதல் (Begging), அரச துரோகம் (Sedition) மற்றும் பொது ஒழுங்கு மீறல் (Public order offences) போன்ற சட்டங்களைக் குறிவைக்கின்றது. இச்சட்டங்கள் வறுமையில் உள்ளவர்கள், பெண்கள், வீடற்றோர், புலம்பெயர்ந்தோர், பாலியல் தொழிலாளர்கள், பால்பல்வகைமை  (LGBTQIA+) சமூகத்தினர் மற்றும் ஏனைய ஒதுக்கப்பட்ட குழுக்களையே மிகக் கடுமையாகப் பாதிக்கின்றன. நீதிமன்ற வழக்குகள் (Litigation), பரிந்துரை (Advocacy), சட்ட வழிகாட்டல்கள், பிராந்திய ஒன்றுகூடல்கள் மற்றும் மூலோபாய வளங்களைப் பயன்படுத்துவதன் ஊடாக, காலனித்துவ கால சட்டத் தொடர்ச்சிகளை (Colonial Legacies) அடிப்படையாகக் கொண்ட சட்டங்களைச் சீர்திருத்துவதையும், உலகளவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதையும் இவ்வியக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

WINGS

WINGS என்பது பரோபகார ஆதரவு மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கான  ஒரே உலகளாவிய வலையமைப்பாகும். இது 60 நாடுகளில் உள்ள 230-க்கும் மேற்பட்ட சிந்தனையாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களைக் கொண்ட ஒரு குழுமமாகும் . சமூக முன்னேற்றத்திற்கான ஒரு ஊக்கியாக  பரோபகாரத் துறை அதன் முழுத் திறனை எட்டுவதை உறுதி செய்யவும், அதனை வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் இச்சமூகம் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. துறையில் நிலவும் தேக்கநிலையை  முடிவுக்குக் கொண்டு வரவும், தொடர்பற்றநிலையில் செயல்படும் போக்கினை  உடைக்கவும், பாரம்பரியக் கருத்துகளுக்குச் சவால் விடவும், பரோபகாரம் செழிக்கத் தேவையான ஒரு வழிவகை செய்யும் பின்னணியை உருவாக்கவும் WINGS உறுதிபூண்டுள்ளது. ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் ஆற்றலைத் தூண்டுவதும் இதன் இலக்காகும். உலகெங்கிலும் உள்ள பரோபகாரச் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து மிகவும் நீதியான, சமத்துவமான மற்றும் நிலையான உலகைக் கட்டியெழுப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. NTT அமைப்பு, WINGS ஆசிய பசிபிக் இணை-குழுவின் (WINGS Asia Pacific Co-Group) ஒரு முன்னணி உறுப்பினராகவும் உள்ளது.

மனித உரிமைகள் நிதி வழங்குநர் வலையமைப்பு (Human Rights Funders Network - HRFN)

மனித உரிமைகள் நிதி வழங்குநர் வலையமைப்பு (Human Rights Funders Network – HRFN) என்பது 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 450-க்கும் அதிகமான நிதிக்கொடை வழங்கும் நிறுவனங்களைக் கொண்ட ஒரு உலகளாவிய சமூகமாகும். இவை, ஒருங்கிணைந்த மற்றும் மக்கள் இயக்கங்களை மையப்படுத்திய கொடையாண்மையின்  (Philanthropy) ஊடாக மனித உரிமைகளை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுகின்றன. 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட HRFN, பல்வேறு கொடை வழங்கும் நிறுவனங்கள், நன்கொடையாளர் வலையமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையிலான நிதி வழங்குநர்களை இணைக்கின்றது. இதன் மூலம் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், அதிகாரம் மற்றும் வளங்களை அடிமட்ட சமூக நிறுவனங்களுக்கு மாற்றியமைக்கவும், நீதியை மையமாகக் கொண்ட நிதிக்கொடை வழங்கும் முறையை வலுப்படுத்தவும் இது செயற்படுகின்றது. பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, இனத்துவ நீதி மற்றும் கூட்டுப் பராமரிப்பு ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு, நிதிப் போக்குகள் குறித்த ஆராய்ச்சி, நடைமுறை நிதிக்கொடை கோட்பாடுகள், சக நிறுவனங்களுக்கிடையிலான அறிவுப் பகிர்வு தளங்கள் மற்றும் உலகளாவிய மாநாடுகள் ஆகியவற்றின் மூலம் ஒரு திறந்த பரோபகாரச் சூழலை HRFN ஊக்குவிக்கின்றது. ஒதுக்கப்பட்ட மக்களின் குரல்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், வலுவான ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும், மனித உரிமைகள் நிதி வழங்கல் செயற்பாட்டுத் தளம் இன்னும் உள்ளடக்கியதாகவும், நீதியானதாகவும், தேவைகளுக்கு விரைந்து பதிலளிக்கக்கூடியதாகவும் அமைவதை HRFN உறுதிசெய்து மறுசீரமைத்து வருகின்றது.

ShiftThePower - அதிகார மாற்றம் / மாற்றத்திற்கான தருணம்

#ShiftThePower இயக்கம் என்பது அதிகார மைய கொடையாண்மை மற்றும் சர்வதேச அபிவிருத்தி முறைகளுக்குச் சவால் விடுகின்ற ஒரு உலகளாவிய முன்னெடுப்பு முயற்சியாகும். இது நிதிக்கொடை வளங்களில் கட்டளைவிடும் அதிகார  படிநிலைகளைத் தவிர்த்து, அவ்வதிகாரத்தை உள்ளூர் சமூகங்களுக்கும் மற்றும் உள்ளூர் செயற்பாட்டாளர்களுக்கும் முழுமையாக மாற்றியமைக்க வேண்டுமென வலியுறுத்துகின்றது. நிர்வாக நடைமுறைச் சிக்கல்கள் மிகுந்த பாரம்பரிய உதவி வழங்கும் முறைமைகளை  பதிலாக, பரஸ்பர நம்பிக்கை, உள்ளூர் வளங்கள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமான பங்காளித்துவத்தை உருவாக்குவதற்கு இது முயல்கின்றது. இதன் ஊடாக நிலையான மற்றும் சமூகத்தினால் வழிநடத்தப்படும் மாற்றத்தை அடைவதே இதன் பிரதான இலக்காகும். 

 

பாரம்பரிய உதவி வழங்கும் முறையானது நீடிக்க முடியாதது மட்டுமல்லாது, பல நேரங்களில் பயனற்றதாகவும் இருப்பதை இவ்வியக்கம் சுட்டிக்காட்டுகின்றது. எனவே, உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் மக்களின் கௌரவத்தை மதிக்கின்ற தீர்வுகளை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகின்றது. சமூகங்கள் தங்களின் சொந்த அபிவிருத்தியை வரையறுப்பதற்கான மிகச்சிறந்த தகைமையைக் கொண்டுள்ளன என்பதை நன்கொடையாளர்கள் உணர வேண்டும். அத்துடன், நன்கொடையாளர்கள் தங்களை ஒரு “கட்டுப்பாட்டாளராகப்” பார்க்கும் மனப்பாங்கிலிருந்து விடுபட்டு, ஒரு “பங்காளர் மனப்பாங்கிற்கு” மாற வேண்டும் என்பதையும் இவ்வியக்கம் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றது.

சமாதானத்திற்கான அமைப்புகளின் வலையமைப்பு (Foundations for Peace Network - FFPN)

சமாதானத்திற்கான அமைப்புகளின் வலையமைப்பு (FFPN) என்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயங்கும், உள்ளூர் சமூகப் பின்புலத்தைக் கொண்ட சமாதானத்தை கட்டியெழுப்பும் அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பாகும். நியூயோர்க்கில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இது பரஸ்பர ஆதரவு, அறிவுப் பகிர்வு மற்றும் உள்ளூர் மக்களால் வழிநடத்தப்படும் சமாதான செயல்முறைகளுக்கான ஒரு வலுவான தளமாக வளர்ந்து வருகின்றது. இவ்வலையமைப்பு, பாதிக்கப்பட்டவர்களை வலுப்படுத்துதல், பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்வாங்குதல் மற்றும் நிலையான, உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான உந்துசக்தியாக சமூக அடிப்படையிலான பரோபகாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது. நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியம் (NTT), FFPN வலையமைப்பின் ஒரு ஸ்தாபக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ENGLISH
  • ENGLISH
  • TAMIL
  • SINHALA

95 Partners

Economic Justice | Gender justice | Access to legal remedies | Emerging issues | Solidarity | Health equity | Disability rights | Care | Co-existence | Narratives | Knowledge | Citizenship | Public institutions and accountability

44 Partners

Economic Justice | Gender justice | Access to legal remedies | Emerging issues | Solidarity | Co-existence | Narratives | Knowledge

58 Partners

Economic Justice | Gender justice | Access to legal remedies | Emerging issues | Solidarity | Health equity | Disability rights | Care | Citizenship | Public institutions and accountability

43 Partners

Emerging issues | Solidarity | Economic Justice | Gender justice | Access to legal remedies | Citizenship | Public institutions and accountability

48 Partners

Emerging issues | Solidarity | Economic Justice | Gender justice | Access to legal remedies | Health equity | Disability rights | Care | Citizenship | Public institutions and accountability

37 Partners

Emerging issues | Solidarity | Economic Justice | Gender justice | Access to legal remedies | Health equity | Disability rights | Care

40 Partners

Economic Justice | Gender justice | Access to legal remedies | Emerging issues | Solidarity | Health equity | Disability rights | Care | Citizenship | Public institutions and accountability

33 Partners

Emerging issues | Solidarity | Economic Justice | Gender justice | Access to legal remedies | Citizenship | Public institutions and accountability

48 Partners

Economic Justice | Gender justice | Access to legal remedies | Health equity | Disability rights | Care | Emerging issues | Solidarity | Co-existence | Narratives | Knowledge