ENGLISH
  • English
  • Tamil
  • Sinhala
Neelan Tiruchelvam Trust values page hero banner

எமது விழுமியங்கள்

நீதி, சமநிலை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எமது வழிகாட்டும் கொள்கைகள் சமூகங்கள், பங்காளர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான எமது உறவுகளைத் தீர்மானிக்கின்றன. பல்வேறு சூழ்நிலைகளிலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் நாம் கொண்டுள்ள உறுதியை இக்கொள்கைகள்  வழிநடத்துகின்றன.

எமது விழுமியங்கள்

நீதி, சமநிலை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எமது வழிகாட்டும் கொள்கைகள் சமூகங்கள், பங்காளர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான எமது உறவுகளைத் தீர்மானிக்கின்றன. பல்வேறு சூழ்நிலைகளிலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் நாம் கொண்டுள்ள உறுதியை இக்கொள்கைகள்  வழிநடத்துகின்றன.

ஒத்துணர்வைச் செயலாக்கி, அக்கறையுடன் செயற்படுதல்

உள்ளகத்திலும் மற்றும் சமூகங்களுடனும் கூருணர்வும் ஒத்துணர்வும் கொண்டு பணியாற்றுதல்

எமது பங்காளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் நன்கு அறிவோம். மேலும்  அவர்களின் நெருக்கீடுகளைக்  குறைப்பதோடு; ஒருவருக்கொருவர் ஆதரவுடன், ஒத்துணர்வு மிக்க, நம்பிக்கையான மற்றும் அதிகாரப் படிநிலைகளற்ற, சமத்துவமான (Horizontal) பிணைப்பைப் பேணுவதில் நாம் உறுதியாக உள்ளோம்

நேர்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக விழுமியங்களை எமது செயல்பாடுகளில் நிலைநிறுத்துதல்

பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் வழுவாமை ஆகிய ஜனநாயகப் பண்புகளை எமது செயல்பாடுகளில் நிலைநிறுத்துதல்.

ஆற்றல்மிக்க, பன்முகத்தன்மை வாய்ந்த சிவில்  சமூகத்தை உள்ளடக்கிய, பங்கேற்பு சார்ந்த ஜனநாயகச் சூழலை நாங்கள் வளர்த்தெடுக்கிறோம். அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதும், , சட்டத்தின் ஆட்சி, நாணயம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய உயர் நெறிமுறைகளை நிலைநிறுத்துவதே எமது முதன்மை நோக்கம். இந்த நெறிமுறைகளை எமது நிறுவனமும், எம்முடன் இணைந்துள்ள பங்குதாரர்களும் முழுமையாகப் பின்பற்றுவதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்

அகிம்சையின் மூலம் நீதி மற்றும் சமாதானம்

உண்மை, நீதி, அமைதி மற்றும் அகிம்சையான வழிமுறைகளுடன்கூடிய நிலைமாற்றத்தை பேணுதல்.

முரண்பாடுகளுக்கு அகிம்சையான வழியிலும் நீதியின் அடிப்படையிலும் தீர்வு காண்பதையே எமது அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பாதிப்புகளை ஆற்றுப்படுத்தி, உறவுகளைச் சீரமைப்பதன் மூலம் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்த்தெடுக்கும் அதேவேளையில், அநீதியையும் சமத்துவமின்மையையும் நிலைநிறுத்தும் ஒடுக்குமுறை நடைமுறைகளை வேரறுக்க நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம். மேலும், நீதித்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் நியாயமான மற்றும் நம்பகமான நிறுவனங்களாகவும்  , சமத்துவமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், மனித உரிமைகளை மதிக்கும் அமைப்புகளாக மறுசீரமைக்கப்படுவதற்கான மாற்றங்களை நாங்கள் முன்னெடுக்கிறோம்.

சிறப்புச் சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், சமநீதியை உறுதிப்படுத்தி, அனைவரையும் பலப்படுத்துதல்

சமநீதியை உறுதிப்படுத்துதல், மேலாதிக்கச் சிறப்புரிமைகளைச் சவாலுக்குட்படுத்தல் மற்றும் அனைவரையும் பலப்படுத்தல்.

தற்போதுள்ள சமூகக் கட்டமைப்புகளும் கலாச்சார நடைமுறைகளும் சமத்துவமின்மையை என்றும் நிலைநிறுத்துவதோடு, மக்களிடையே பெரும் தடைகளையும் உருவாக்குகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். குறிப்பாக பாலினம், வயது, இனம், மதம், கலாச்சாரம் அல்லது இயலாமையுடைமை காரணமாகத் தொடர்ச்சியாகப் பாகுபாடுகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் உள்ளாகும் மக்கள், தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் உரிமைகளை அனுபவிப்பதிலும் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் நன்கு அறிவோம். நிதிக்கொடை வழங்கும் நிறுவனம் என்ற வகையில் எங்களிடம் உள்ள சிறப்புரிமையை  தொடர்ந்து சுயபரிசோதனை செய்யும் அதேவேளையில், எமது பங்காளர்களுக்கும் எங்களுக்குமிடையே வளங்கள் சமமாகப் பகிரப்படுவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம். அனைவரின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நலனைப் பாதுகாக்கும் கொள்கைகளை முன்னெடுப்பதன் மூலம், காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்தவும், தனிநபர்கள் முதல் நிறுவனங்கள் வரை அனைவரும் ஒரு நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக பரிணமிக்கவும் எமது பணிகளைத் தொடர்கிறோம்

பங்காளர் பிணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் ஒன்றிணைந்து வலுப்பெறுதல்

கூட்டொருமைப்பாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் பங்காளர் பிணைப்பை வலுப்படுத்துதல்.

கூட்டொருமைப்பாடு மற்றும் பங்காளர் இணைவு முயற்சியிலிருந்தே உண்மையான அதிகாரமும் வலிமையும் பிறக்கின்றன என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இத்தகைய முன்னெடுப்புகளில் ஒவ்வொரு பங்காளரும் தங்களின் தனித்துவமான ஆற்றல்களையும், பன்முகத்தன்மை கொண்ட வாழ்வியல் பின்புலங்ககளையும் பங்களிக்கின்றனர். இலங்கையில் கூட்டொருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் பணி இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதை உணர்ந்துள்ளோம்; எனவே, பங்காளர்களின் பன்முகத்தன்மை கொண்ட கண்ணோட்டங்களையும் வலிமையையும் ஒருங்கிணைக்கும் வலைப்பின்னல்களை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். குறிப்பாக, வரலாற்று ரீதியாகப் பாகுபாடுகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் உள்ளான சமூகங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கூட்டொருமைப்பாடுகளில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். இதன் மூலம், மிகவும் வினைத்திறனான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பெறுபேறுகளை எட்டுவதே எமது இலக்காகும்.

பல்வகைமையை அரவணைத்து, அனைவரையும் உள்ளடக்கிய பண்பை உறுதிப்படுத்துதல்

அனைவரையும் உள்ளடக்கிய பண்பை உறுதிப்படுத்துவதுடன், பன்முகத்தன்மை மற்றும் பல்வகைமையை முன்னிறுத்துதல்.

பலவகைமையின் செழுமையையும், எமது பொதுவான மாணுடப் பண்பைக் கொண்டாடுவதையும் நாம் உள்ளார ஏற்று மதிக்கிறோம்.
எனினும், எமது கூட்டுப் பலமானது மக்களிடையேஆன இந்த பலவகைமைகளிலும் ஒற்றுமைகளிலுமே ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம்.

கற்றல், பகிர்வு மற்றும் ஒன்றிணைந்த வளர்ச்சியை ஊக்குவித்தல்

கற்றல் மற்றும் அறிவுப் பகிர்வில் ஈடுபாட்டுடன் இருத்தல்.

எமது பணியாளர்கள், பணிப்பாளர் சபை மற்றும் பங்காளர்களுடனான அன்றாட நடைமுறைகளையும், மூலோபாயத் திட்டமிடல் அணுகுமுறைகளையும் வலுப்படுத்துவதற்கான எமது ‘கொள்கை உறுதிப்பாட்டு நடைமுறையாக’ (As our political practice); கற்றல், ஆக்கபூர்வமான செயல்பாடு, புதிய முயற்சிகளைப் பரீட்சித்தல் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை நாம் உயர்வாக மதிக்கிறோம்

ENGLISH
  • ENGLISH
  • TAMIL
  • SINHALA