இலங்கையில் சமூக நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளதோடு, ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும், ஒரு நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதில் மக்கள் ஆக்கபூர்வமாகப் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கும் பணியாற்றி வருகிறோம்; ஏனெனில், சமூகங்கள் பலப்படுத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட்டு, பல்வேறு பங்குதாரர்கள் இணைந்து செயல்படும்போது மட்டுமே நிலையான சமாதானம்,, நீதி மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தியை அடைய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
இலங்கையில் சமூக நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளதோடு, ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும், ஒரு நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதில் மக்கள் ஆக்கபூர்வமாகப் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கும் பணியாற்றி வருகிறோம்; ஏனெனில், சமூகங்கள் பலப்படுத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட்டு, பல்வேறு பங்குதாரர்கள் இணைந்து செயல்படும்போது மட்டுமே நிலையான சமாதானம்,, நீதி மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தியை அடைய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
சமூக மட்டத்திலான மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் இயலுமையையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான மாற்றத்தையும் வலுப்படுத்துவதற்காக நாங்கள் நிதிக்கொடைகளை வழங்குகிறோம். சமூக நீதி, சமாதானம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் முயற்சிகளில் எமது நிதிக்கொடைகள் கவனம் செலுத்துகின்றன. ஒரு நிதிக்கொடை நிறுவனமாக இருப்பதற்கும் அப்பால், எமது பங்காளிகள் ஆக்கபூர்வமான திட்டங்களை வடிவமைக்கவும், தீர்வுகளின் வீச்சினை அதிகரிக்கவும், தமது சமூகங்களில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தவும் தேவையான தொழில்நுட்ப ஆதரவு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம்.
நீதி மற்றும் உரிமைகள் குறித்த கருத்தாடல்களுக்காக அறிவுசார்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஜனநாயக ரீதியிலான களங்களை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் மூலம், வெறும் கருத்துக்களை உருவாக்குவதோடு நின்றுவிடாமல், சமூகங்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து பொதுமக்களின் உரையாடல்களைச் சீரமைக்க முற்படுகிறோம். இப்பணியின் தொடர்ச்சியாக, நீதியானதும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஓர் இலங்கையைக் கட்டியெழுப்ப ஏதுவாக, விமர்சன சிந்தனையையும் பரஸ்பர அறிவுப் பகிர்வு மற்றும் கூட்டுப் பிரதிபலிப்புகளையும் NTT முன்னெடுக்கின்றது. இறுதியாக, உரையாடல், பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக ஈடுபாடு ஆகிய விழுமியங்களின் அடிப்படையில், சிவில் சமூகத்திற்குத் தேவையான பலத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் ஒரு சூழலை உருவாக்குவதில் இது ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.
அனைத்து மக்களும், குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்களும் பொருளாதார வளங்கள், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்புகளைச் சமதத்துவமான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் பணிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேவேளையில், கட்டமைக்கப்பட்ட சமத்துவமின்மைகளுக்குச் சவாலாக விளங்குவதுடன், பெண்கள் மற்றும் பால்பல்வகைமை (LGBTQIA+) சமூகத்தினரின் குரல்களை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்தவும் பாலின நீதி சார்ந்த முன்னெடுப்புகளுக்கு நாங்கள் துணைநிற்கிறோம். இதன் தொடர்ச்சியாக, சமூகங்களின் தலைமையிலான தலையீடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், சட்டப் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்ட ரீதியான தீர்வுகளைக் கண்டடைவதற்கும் வழிவகை செய்கிறோம். இறுதியாக, இத்தகைய செயல்பாடுகள் சமூகங்கள் தங்களின் உரிமைகளைக் கோரவும், அவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏதுவான சூழலை உருவாக்குகின்றன.
சிவில் ஈடுபாடு, அர்த்தமுள்ள ஜனநாயக பங்கேற்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலுப்படுத்தும் திட்டங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். அதனடிப்படையில், எமது நிதிக்கொடை வழங்கலானது, சமூகங்கள் கொள்கைகளை வடிவமைப்பதற்கும் நிறுவனங்களைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கும் ஏதுவான முன்னெடுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. இத்தகைய செயல்பாடுகளின் ஊடாக, பொதுக் கட்டமைப்புகள் அனைத்து மக்களுக்கும் சமத்துவமான முறையில் சேவையாற்றுவதை உறுதிப்படுத்துகிறோம்.
ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய ஆரோக்கியம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். உளச்சமூக ஆதரவு மற்றும் நலன்பேணலுக்கான சமூகங்களின் தலைமையிலான அணுகுமுறைகள் உள்ளடங்கலாக, சுகாதாரச் சேவைகளைச் சமத்துவமான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் திட்டங்களுக்கு வலுசேர்க்கிறோம். அத்தோடு, மனித கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் இயலாமையுடையவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான பணிகளில் எமது காத்திரமான ஈடுபாட்டினைத் தொடர்கிறோம்.
சமூக நல்லிணக்கம், கருத்தாடல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அறிவுப் பகிர்வு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் பணிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். சமூகங்களின் வழிவந்த வாழ்வியல் அனுபவப் பதிவுகளுக்கும் மேலாதிக்கக் கருத்துருவாக்கங்களுக்குச் சவாலாக அமையும் ஆய்வுகளுக்கும் எமது நிதிக்கொடை வழங்கலில் முன்னுரிமை அளிக்கிறோம். இதன் ஊடாக, பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு குழுக்களிடையேயான உள்ளூர் மக்களின் குரல்களை முதன்மைப்படுத்தி, அவற்றை வலுவான தளத்திற்குக் கொண்டு செல்வதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த புதிய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தொலைநோக்குடைய முன்னெடுப்புகளை நாங்கள் ஆதரிக்கிறோம். எமது நிதிக்கொடை வழங்கலானது; சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்படவும், மாற்றத்தை முன்னின்று வழிநடத்தவும் ஏதுவான கூட்டு ஒத்துழைப்பு, மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோழமை வலையமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றது. இதன் மூலம், சமூகங்கள் கூட்டாகச் செயற்பட்டு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவர்களது ஆற்றலைப் பலப்படுத்துவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.