இலங்கையில் சிவில் சமூகத்தைப் பலப்படுத்துவதற்காக, நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நித்தியமானது மூலோபாய ரீதியான, பங்கேற்பு அடிப்படையிலான மற்றும் நெகிழ்வான நிதியுதவிகளை வழங்கி வருகின்றது. இத்தகைய நிதிக்கொடைகள் ஊடாக, நாம் நீண்டகாலப் பங்களிப்புகளில் முதலீடு செய்வதுடன், சமூகங்களை வலப்படுத்தி , மேலும் உள்ளடக்கிய, ஜனநாயகப் பண்புகள் கொண்ட மற்றும் நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவுகின்றோம்.
எமது நிதிக்கொடைகள் பின்வருவனவற்றிற்கு ஆதரவளிக்கின்றன:
இலங்கையில் சிவில் சமூகத்தைப் பலப்படுத்துவதற்காக, நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நித்தியமானது மூலோபாய ரீதியான, பங்கேற்பு அடிப்படையிலான மற்றும் நெகிழ்வான நிதியுதவிகளை வழங்கி வருகின்றது. இத்தகைய நிதிக்கொடைகள் ஊடாக, நாம் நீண்டகாலப் பங்களிப்புகளில் முதலீடு செய்வதுடன், சமூகங்களை வலப்படுத்தி , மேலும் உள்ளடக்கிய, ஜனநாயகப் பண்புகள் கொண்ட மற்றும் நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவுகின்றோம்.
எமது நிதிக்கொடைகள் பின்வருவனவற்றிற்கு ஆதரவளிக்கின்றன:
வலிமையான சிவில் சமூக அமைப்புகள், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட சமூகங்களுக்கு இன்றியமையாதவை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இந்த நிறுவனச் செயல்பாட்டு நிதியூடாக, எமது பங்காளர் பின்வரும் விடயங்களுக்கான நெகிழ்வான ஆதரவை நாம் வழங்குகின்றோம்:
பாரம்பரிய நிதி ஆதாரங்களை அணுகுவதில் பெரும்பாலும் சவால்களை எதிர்கொள்ளும் அடிமட்ட சமூக அமைப்புகளுக்கும் (CBOs), நலிவடைந்த மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கும் இத்தகைய நிறுவனச் செயல்பாட்டு நிதி மிகவும் இன்றியமையாதது. இவ்வமைப்புகளின் நிறுவன ஆரோக்கியம் மற்றும் நிலைபேற்றுத்தன்மையில் முதலீடு செய்வதன் மூலம், அனைத்துத் தரப்பினருக்குமான ஒரு சமமான களத்தை உருவாக்க நாம் உதவுகின்றோம். இதன் ஊடாக, பிரச்சினைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களே அமாற்றத்தை முன்னின்று வழிநடத்துவதற்கான போதிய ஆற்றலையும் வளங்களையும் கொண்டிருப்பதை நாம் உறுதி செய்கின்றோம்.
நிதியுதவி வழங்கும் துறையின் சிறந்த நடைமுறைகளைத் தழுவிய இம்முறை, வளங்களை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எமது பங்காளர் அமைப்புகளிடமே வழங்குகின்றது. இது அதிகாரத்தை நகர்த்துதல் (#ShiftingThePower) எனும் உலகளாவியக் கோட்பாட்டுடன் ஒத்துப்போவதுடன், சிவில் சமூகத்தின் தற்சார்பு நிலைக்கும் சுதந்திரமான செயல்பாட்டிற்கும் வலுசேர்க்கின்றது.
நிதியுதவிகளில் நெகிழ்வுத்தன்மை என்பது மிக முக்கியமானது என்றாலும், எமது பங்காளர் அமைப்புகள் புதிய கருத்துக்களைப் பரீட்சித்துப் பார்க்கவும், தமது கருப்பொருள் சார்ந்த நிபுணத்துவத்தை ஆழப்படுத்தவும், சமூகங்களுக்குள் புத்தாக்கமான தீர்வுகளைச் செயல்படுத்தவும் உதவும் செயற்திட்ட அடிப்படையிலான நிதியுதவிகளிலும் நாம் முதலீடு செய்கின்றோம். இச்செயற்திட்டங்கள் எமது முன்னுரிமைக்குரிய கருப்பொருள் களங்களுடன் ஒத்திசைந்து அமைகின்றன. சமூகத்தை முன்னிறுத்திய, பங்கேற்புத் தன்மையுடைய மற்றும் உள்ளூர் யதார்த்தங்களில் வேரூன்றிய முன்முயற்சிகளுக்கே NTT நிதியளிக்கின்றது. இதன்மூலம், குறுகிய கால இலக்குகளைத் தாண்டி, நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்துவதை நாம் உறுதி செய்கின்றோம்.
சிறிய நிதிக்கொடைகள் அடிமட்டக் குழுக்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தங்களின் உடனடித் தேவைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் விரைவாகப் பதிலளிக்க, நெகிழ்வான வளங்களை வழங்குகின்றன.
நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தின் (NTT) சிறிய நிதிக்கொடை திட்டமானது வேகம், நெகிழ்வுத்தன்மை மற்றும் உடனடிப் பதிலளிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமூகங்கள் தங்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய வழிவகுக்கின்றது. வளங்களையும் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்கி, ஓரங்கட்டப்பட்டவர்களின் குரல்களை வலுப்படுத்துவதன் மூலம், இத்திட்டமானது #அதிகாரத்தை நகர்த்துதல் (#ShiftThePower) எனும் விழுமியத்தை முழுமையாகப் பிரதிபலிக்கின்றது. பெரும்பாலும், இச்சிறிய நிதியுதவிகள் புதிய அமைப்புகளுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்து, அவர்களின் நம்பகத்தன்மையையும் ஆற்றலையும் வளர்க்க உதவுகின்றன. இது அவர்கள் பிற்காலத்தில் பெரிய அளவிலான, நிலையான நிதியுதவிகளைப் பெறுவதற்கான தகைமையைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றது.
நிறுவனச் செயல்பாட்டு நிதிக்கொடை, செயற்திட்ட நிதிக்கொடை மற்றும் சிறிய நிதிக்கொடை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், NTT ஒரு கலப்பு நிதியுதவி மாதிரியைப் பின்பற்றுகின்றது. இது நெகிழ்வுத்தன்மையையும் கட்டமைப்பையும் சமநிலைப்படுத்துவதுடன், உடனடிப் பதிலளிப்பையும் நீண்டகாலத் தொலைநோக்கையும் ஒருசேரக் கொண்டுள்ளது.
நன்கொடையாளர்கள் அல்லாமல் சமூகங்களே தங்களின் முன்னுரிமைகளைத் தீர்மானிக்கும்போதும், மாற்றத்தை முன்னெடுப்பவர்களின் வாழ்வியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப நிதிக்கொடைகள் அமையும்போதும் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் எனும் எமது நம்பிக்கையை இத்தகைய பன்முக அணுகுமுறை பிரதிபலிக்கின்றது.