திட்ட முன்மொழிவுகள் குறித்த எமது மதிப்பீடானது, வழக்கமான நன்கொடையாளர்களின் சரிபார்ப்புப் பட்டியல்களுக்கு அப்பாற்பட்டது. சமூகங்கள் தங்களின் முன்னுரிமைகளை எவ்வாறு தாமாகவே தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகளில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை எவ்வாறு பேணப்படுகின்றது மற்றும் நீண்டகால மாற்றத்தை முன்னெடுப்பதில் நிறுவனங்களுக்கு—குறிப்பாகச் சமூக அடிப்படையிலான மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு—உள்ள ஆற்றல் ஆகியவற்றை நாங்கள் உற்றுநோக்குகிறோம். இந்த மதிப்பீட்டு முறையானது, உள்ளூர் சமூகங்களின் சுயாதீனமான செயல்பாட்டை ஊக்குவிக்கவும், முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்கவும் மற்றும் நட்புறவுடனான பங்காளர் உறவை வளர்த்தெடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்ட முன்மொழிவுகள் குறித்த எமது மதிப்பீடானது, வழக்கமான நன்கொடையாளர்களின் சரிபார்ப்புப் பட்டியல்களுக்கு அப்பாற்பட்டது. சமூகங்கள் தங்களின் முன்னுரிமைகளை எவ்வாறு தாமாகவே தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகளில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை எவ்வாறு பேணப்படுகின்றது மற்றும் நீண்டகால மாற்றத்தை முன்னெடுப்பதில் நிறுவனங்களுக்கு—குறிப்பாகச் சமூக அடிப்படையிலான மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு—உள்ள ஆற்றல் ஆகியவற்றை நாங்கள் உற்றுநோக்குகிறோம். இந்த மதிப்பீட்டு முறையானது, உள்ளூர் சமூகங்களின் சுயாதீனமான செயல்பாட்டை ஊக்குவிக்கவும், முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்கவும் மற்றும் நட்புறவுடனான பங்காளர் உறவை வளர்த்தெடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் மிகவும் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். குறிப்பாக, பிரதான அபிவிருத்திப் கருத்தாடல்களில் யாருடைய குரல்கள் பெரும்பாலும் உள்வாங்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றனவோ, அத்தகைய சமூகங்களை மையப்படுத்தியே எமது செயல்பாடுகள் அமைகின்றன
இத்திட்ட முன்மொழிவானது பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களைப் பிரதிபலிப்பதோடு, பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை குழுக்களின் குரல்களை வலுப்படுத்துகிறது.
தேவைகளைக் கண்டறிவதில் சமூகங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு முறைகள் ஓரளவுக்கு மேலிருந்து கீழான (Top-down) அணுகுமுறையைக் கொண்டுள்ளன.
இத்திட்ட முன்மொழிவானது வெளிப்புற நபர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சமூகப் பங்கேற்புக்கான சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன அல்லது நலிவடைந்த பிரிவினர் மீதான கவனம் குறைவாக உள்ளது.
போதிய சேவைகள் சென்றடையாத பிரதேசங்கள் அல்லது வளங்கள் மிகக் குறைவாக உள்ள சமூகங்களில் இயங்கும் சிவில் சமூக அமைப்புகளை (CSOs) வலுப்படுத்துவதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
போதிய சேவைகள் சென்றடையாத அல்லது தொலைதூரப் பிரதேசங்களில் அடித்தள மக்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருத்தல்; ஆதரவுகள் மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய இடங்களுக்குச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான அர்த்தமுள்ள திட்டங்களைக் கொண்டிருத்தல்.
நகர்ப்புறம் மற்றும் நகர்ப்புறம் அல்லாத பகுதிகள் ஆகிய இரண்டிலும் கலந்து பணிகளை முன்னெடுத்தல்; ஓரங்கட்டப்பட்ட பிராந்தியங்களைச் சிறு அளவில் சென்றடைதல்.
ஏற்கனவே போதிய வசதிகள் மற்றும் சேவைகள் உள்ள பகுதிகளில் மட்டுமே செயல்பாடுகள் பெரிதும் குவிந்திருத்தல்; விளிம்புநிலை மக்களை உள்வாங்குவதற்கான எந்தவொரு உத்திகளும் இல்லாதிருத்தல்.
மக்களிடமிருந்தே நேரடியாக உருவாகும், உள்ளூர் சூழலுக்கு அமைவான மற்றும் வெறும் திட்ட வெளியீடுகளுக்கு (Outputs) அப்பால் சென்று, ஒரு முறையான மாற்றத்தை (Systemic transformation) நோக்கிய தொலைநோக்குக் கொண்ட கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்கிறோம்
உயர்மட்டம் (மாற்றத்தை நோக்கியது): சமூக முன்னுரிமைகளில் வேரூன்றிய இக்கருத்தாக்கம், புதுமையானதும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக்கூடியதுமாகும். இது உள்ளூர் யதார்த்தங்களை நீதி, சமத்துவம் மற்றும் அமைதிக்கான பரந்த போராட்டங்களுடன் இணைப்பதோடு, மக்களின் பொறுப்பேற்பின் மூலம் நிலைத்திருக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது
இக்கருத்தாக்கம் எமது கருப்பொருள் பகுதிகளுடன் (Thematic areas) ஒத்துப்போகின்ற போதிலும், சமூகப் பங்களிப்பு அல்லது புத்தாக்கத்தில் குறைந்த அளவிலேயே உள்ளது.
இக்கருத்தாக்கம் நிதியளிப்பவர்களை மையப்படுத்தியது (Donor-driven), நிலைத்திருக்க முடியாதது அல்லது கள யதார்த்தங்களிலிருந்து விடுபட்டது.
கட்டமைப்பு ரீதியான தடைகளை உணர்ந்து, பிரதான நீரோட்ட நிதி ஆதாரங்களை அணுகுவதில் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளைக் கொண்ட அமைப்புகளுக்கு — குறிப்பாக அடிமட்ட மற்றும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாட்டாளர்க்ளுக்கு நாம் குறிப்பாக வளங்களை வழங்குகிறோம்
நிறுவனம் நிதி பெறுவதில் கட்டமைப்பு ரீதியான தடைகளை எதிர்கொள்கிறது; ஆனால் தனது சமூகத்தில் வலுவான நற்பெயரையும் (Legitimacy) நம்பிக்கையையும் கொண்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் நிதியானது, நிலவும் அதிகார சமநிலையின்மையைச் சீர்செய்ய உதவும்.
நிறுவனம் ஏற்கனவே சில நிதிக்கொடையாளர்களை அணுகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது, இருப்பினும் அதன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்கிறது; எமது நிதியுதவியானது இவர்களின் தற்போதைய ஆதரவுத் திட்டங்களுக்கு ஒரு கூடுதல் பலமாக அமையும்.
நிறுவனம் ஏற்கனவே கணிசமான நிதி ஆதாரங்களையும் நிதிக்கொடையாளர் தொடர்புகளையும் கொண்டுள்ளது; தேவை அதிகமுள்ள குழுக்களுக்கு வளங்களை பகிர்ந்தளிக்கும் எமது பணியுடன் இது குறைவாகவே ஒத்துப்போகிறது.
இயலுமை என்பது தகுதியைத் தீர்மானித்து யாரையும் தடுத்து நிறுத்துவதற்கான ஒரு கருவி அல்ல மாறாக அது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். நிறுவனங்களின் வளர்ச்சி, மாற்றங்களை ஏற்றுச் செயல்படும் திறன் மற்றும் நிலைபேறு தன்மை ஆகியவற்றில் நாம் முதலீடு செய்கிறோம்.
நிறுவனம் தனது கட்டமைப்புகளை இன்னும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் நிலையிலும், பொறுப்புக்கூறல், உள்ளடக்கிய தன்மை மற்றும் கற்றல் ஆகியவற்றில் உறுதியான அர்ப்பணிப்பைக் வெளிப்படுத்துகிறது; எமது ஆதரவுடன் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் இங்கு உள்ளன.
நிறுவனம் சில அடிப்படை நடைமுறைகளைக் கொண்டுள்ளது, ஆனால் நிலைபேறு தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த எமது ஆதரவு தேவைப்படுகிறது; மேலும், புதியவற்றைத் தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் வளர்வதற்கும் ஆர்வம் காட்டுகிறது.
நிறுவனம் தனது இயலுமையில் பெரும் இடைவெளிகளைக் கொண்டுள்ளதுடன், மாற்றங்களை ஏற்றுக்கொள்வதிலோ அல்லது கற்றலில் ஈடுபடுவதிலோ மிகக் குறைந்த அளவிலான விருப்பத்தையே காட்டுகிறது.
சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, மனித உரிமைகள் மற்றும் வன்முறையற்ற பண்புகளைத் தம்மிடையே கொண்டுள்ள நிறுவனங்களையும், நீதிக்கான ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தங்களைக் கருதும் பங்காளர்களையும் நாங்கள் நாடுகிறோம்.
திட்ட முன்மொழிவானது பங்கேற்பு ரீதியான, உரிமைகள் சார்ந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது; அத்துடன் நிறுவனத்தின் நலன் சார்ந்த குறுகிய நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பரந்த ஒருமைப்பாட்டை (Solidarity) வெளிப்படுத்துகிறது. நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவக் கட்டமைப்புகள் நலிவுற்ற சமூகங்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன.
திட்ட முன்மொழிவானது கொள்கை அளவில் NTT-இன் விழுமியங்களுடன் ஒத்துப்போகிறது; எனினும், அவை நடைமுறையில் முழுமையாக உள்வாங்கப்படவில்லை.
திட்ட முன்மொழிவானது பங்கேற்பு ரீதியான அல்லது உரிமைகள் சார்ந்த அணுகுமுறைகளுக்கான மிகக் குறைந்த அளவிலான சான்றுகளையே வெளிப்படுத்துகிறது.
னைத்து வங்கிக் கணக்குகளையும் திறம்படவும் பாதுகாப்பாகவும் நிர்வகிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; இதன் மூலம் நிதியைப் பாதுகாப்பதையும், நிதிப் பரிமாற்றங்கள் துல்லியமாக அமைவதையும், கணக்குகள் முறையாக ஒப்பிடப்பட்டு, வங்கி கணக்கு இணக்கக்கூற்று தயாரிக்கப்படுவதையும் (Reconciliation) உறுதி செய்கிறோம். எமது அணுகுமுறை, நிறுவனத்தின் உள்ளகக் கொள்கைகள் மற்றும் வெளிப்புற விதிமுறைகளுக்கு இணங்குவதையும், வங்கிக் கணக்குச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், நிறுவன இலக்குகளை அடைவதற்கு வங்கிச் சேவைகளைத் திறமையாகப் பயன்படுத்துவதையும் வலியுறுத்துகிறது.
வங்கிக் கணக்குகள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படுகின்றன; அத்துடன் சீரான இடைவெளியில் வங்கி கணக்கு இணக்கக்கூற்று தயாரிக்கப்படுவதுடன் , நிதியானது துல்லியமாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைத்துப் பரிமாற்றங்களும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு, விதிமுறைகளுக்கு இணங்க நெருக்கமான மேற்பார்வையில் உள்ளன. வலுவான உள்ளகக் கட்டுப்பாடுகள் (Internal controls) மற்றும் நடைமுறைகள் மூலம் அனைத்து வங்கிக் கணக்குகளும் திறம்படவும் முறையாகவும் நிர்வகிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
வங்கிக் கணக்குகள் பொதுவாகச் சரியாக நிர்வகிக்கப்படுகின்றன; இருப்பினும், வங்கி கணக்கு இணக்கக்கூற்று தயாரிப்பதில் அல்லது நிதியைக் கண்காணிப்பதில் எப்போதாவது காலதாமதங்கள் அல்லது முரண்பாடுகள் (Discrepancies) ஏற்படக்கூடும். பெரும்பாலான பரிமாற்றங்கள் துல்லியமாக இருந்தாலும், முழுமையான இணக்கத்தன்மையையும் (Compliance) பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு, உள்ளகக் கட்டுப்பாடுகள் அல்லது மேற்பார்வை நடைமுறைகளில் சில மேம்பாடுகள் தேவைப்படலாம்.
உயர் அபாயம்: வங்கிக் கணக்கு முகாமைத்துவம் சீரற்றதாக உள்ளது; அடிக்கடிப் பிழைகள் ஏற்படுதல், வங்கி கணக்கு இணக்கக்கூற்று தயார்படுத்தப்படாமை அல்லது கணக்கு விபரங்களை சீராகப் பேணுவதில் காலதாமதங்கள் ஏற்படுகின்றன. ஆவணப்படுத்துதல் மற்றும் விதிமுறை இணக்கப்பாடுகளில் (Compliance) இடைவெளிகள் காணப்படுவதுடன், உள்ளகக் கட்டுப்பாடுகள் பலவீனமாக உள்ளன. இது செயல்பாட்டுத் திறனின்மைக்கும், நிதிப் பாதுகாப்பு சார்ந்த ஆபத்துகளுக்கும்(Potential security risks) வழிவகுக்கிறது.
அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் துல்லியமாகவும், பாதுகாப்பாகவும், உரிய காலத்திலும் மேற்கொள்வதில் நாங்கள் உறுதித் தன்மையை பேணுகின்றோம் . இதற்கு வலுசேர்க்கும் வகையில், முழுமையான மற்றும் வெளிப்படையான ஆவணப்படுத்துதல் முறையை நாங்கள் பின்பற்றுகிறோம். எமது அணுகுமுறை, நிதிசார் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை (Compliance) உறுதி செய்வதுடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தெளிவான பதிவேடுகளை பேணுவதை வலியுறுத்துகிறது . பிழைகள், மோசடிகள் மற்றும் கணக்கு முரண்பாடுகளை அறவே தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்; அதேவேளை, கொடுப்பனவு தொடர்பான அனைத்து ஆவணங்களும் எளிதில் அணுகக்கூடியதாகவும், அதன் மூலத்தைத் துல்லியமாகக் கண்டறியக்கூடிய (Traceable) வகையில் இருப்பதை உறுதி செய்கிறோம்.
நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் துல்லியமாகவும், பாதுகாப்பாகவும், உரிய காலத்திலும் செயலாக்கப்படுகின்றன; அத்துடன் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் விரிவான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பதிவுகளும் அதன் மூலத்தைத் துல்லியமாகக் கண்டறியக்கூடிய (Traceable) வகையில் இருப்பதுடன், இச்செயல்முறை தொடர்புடைய கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குகிறது (Compliance). வலுவான உள்ளகக் கட்டுப்பாடுகள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், பிழைகள் அல்லது மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பையும் வழங்குகின்றன.
நிதிப் பரிவர்த்தனைகள் பொதுவாகத் துல்லியமாகவும் உரிய காலத்திலும் மேற்கொள்ளப்படுகின்றன; இருப்பினும், அவ்வப்போது சில சிறிய காலதாமதங்கள் அல்லது கணக்கு முரண்பாடுகள் (Discrepancies) ஏற்படுகின்றன. ஆவணப்படுத்துதல் பெரும்பாலும் முழுமையாக இருந்தாலும், சில இடங்களில் பதிவுகள் விடுபடுதல் அல்லது சீரற்ற நிலை காணப்படலாம். உள்ளகக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும், விதிமுறை இணக்கப்பாட்டையும் (Compliance) பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்குச் சில மேம்பாடுகள் தேவைப்படுகின்றன
நிதிப் பரிவர்த்தனைகள் அடிக்கடி தாமதமடைதல், துல்லியமற்றதாக இருத்தல் அல்லது முறையான ஆவணங்கள் இல்லாது காணப்படுதல் போன்ற நிலைகள் உள்ளன. பதிவேடு பேணல் முறையில் கணிசமான இடைவெளிகள் காணப்படுவதுடன், கொள்கைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் (Compliance) சீரற்ற தன்மை நிலவுகிறது. உள்ளகக் கட்டுப்பாடுகள் பலவீனமாக இருப்பதாலோ அல்லது முற்றாக இன்மையால் , பிழைகள், மோசடிகள் அல்லது நிதி முகைமைத்துவத் தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியமான அபாயங்களுக்கு வழிவகுக்கிறது.
எங்களது நிதி அறிக்கைப்படுத்தல் (Financial reporting) மற்றும் கண்காணிப்புச் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை, சீரான தன்மை மற்றும் துல்லியம் ஆகியவற்றிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். நிறுவனத்தின் உண்மையான நிதி நிலையைப் பிரதிபலிக்கும் தெளிவான, சரியான நேரத்திலான மற்றும் நம்பகமான நிதித் தகவல்களை வழங்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். வழக்கமான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டின் மூலம், நிதிச் செயல்பாடானது எங்களது மூலோபாய நோக்கங்களுடன் (Strategic objectives) ஒத்துப்போவதையும், அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளையும் (Regulatory requirements) பின்பற்றுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். பொறுப்புக்கூறல் மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, எங்களது அறிக்கைப்படுத்தல் அமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.
நிதி அறிக்கைகள் தொடர்ச்சியாகத் துல்லியமாகவும், முழுமையாகவும், குறித்த காலத்திலும் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமான கண்காணிப்பு முறையானது, நிதிச் செயல்பாடுகள் மூலோபாய இலக்குகளுடன் (Strategic goals) ஒத்துப்போவதையும், கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றுவதையும் உறுதி செய்கிறது. நிறுவனம் தனது தீர்மானம் எடுத்தல் மற்றும் செயல்திறன் மேம்பாட்டிற்காக நிதித் தரவுகளைத் முழுமையாகப் பயன்படுத்துகிறது.
நிதி அறிக்கைகள் பொதுவாகத் துல்லியமாகவும் உரிய காலத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்றன; இருப்பினும், அவ்வப்போது சில சிறிய முரண்பாடுகள் அல்லது காலதாமதங்கள் காணப்படுகின்றன. கண்காணிப்பு நடவடிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டாலும், அவை மூலோபாய இலக்குகளுடன் முழுமையாக ஒருங்கிணையாமல் இருக்கலாம். சட்டரீதியான தேவைகள் ஓரளவிற்குப் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
நிதி அறிக்கைகள் அடிக்கடி துல்லியமற்றதாகவோ, முழுமையற்றதாகவோ அல்லது தற்போதைய நிலைக்குப் பொருந்தாதவாறோ (Outdated) இருப்பதுடன், அவற்றைச் சமர்ப்பிப்பதில் கணிசமான காலதாமதங்கள் நிலவுகின்றன. கண்காணிப்பு நடவடிக்கைகள் முறையற்றதாக அல்லது போதுமானதாக இல்லாதிருப்பதோடு, சட்டரீதியான விதிமுறைகளைப் பின்பற்றுவதில் பெரும் பலவீனம் காணப்படுகிறது. தீர்மானம் எடுத்தல் அல்லது செயல்திறன் மேம்பாட்டிற்காக நிதித் தரவுகள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுவதில்லை
வெளிப்படைத்தன்மை, நீதி மற்றும் செயல்திறன் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், ஒரு முறையான கொள்முதல் செயல்முறையை முன்னெடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணத்திற்கேற்ற உரிய மதிப்பைப் (Value for money) பெறுவதை உறுதி செய்வதோடு, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டரீதியான விதிமுறைகளைப் பின்பற்றும் பண்புகளை வலுப்படுத்தும் நோக்கில், முறையான வணிக நெறிமுறைகள் (Ethical practices) ஊடாகப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். திட்டமிடல் முதல் ஒப்பந்த முகாமைத்துவம் வரையிலான கொள்முதல் சுழற்சியின் அனைத்துக் கட்டங்களிலும், போட்டித்தன்மை வாய்ந்த விலை கோரல் (Competitive bidding), அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் நாணயம் (Integrity) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் பிரதானமாக வலியுறுத்துகிறோம்.
கொள்முதல் செயல்முறைகள் முழுமையாக வெளிப்படையானதாகவும், போட்டித்தன்மை வாய்ந்ததாகவும், நியாயமானதாகவும் அமைந்துள்ளன. எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் தெளிவான ஆவணங்கள் உள்ளதால், அவை செலவழிக்கப்படும் பணத்திற்கான தகுந்த மதிப்பையும் (Value for money), தொடர்புடைய விதிமுறைகளுக்கு இணங்குவதையும் (Compliance) உறுதி செய்கின்றன. மேலும், ஒப்பந்தங்கள் திறம்பட நிர்வகிக்கப்படுவதுடன், வழக்கமான கண்காணிப்பு மற்றும் வலுவான பொறுப்புக்கூறல் ஆகியவையும் பேணப்படுகின்றன.
கொள்முதல் செயல்முறைகள் பொதுவாக வெளிப்படையானதாகவும் நியாயமானதாகவும் காணப்பட்ட போதிலும், ஆவணப்படுத்தல் அல்லது போட்டித்தன்மை வாய்ந்த விலைமனுகோரல் ஆகியவற்றில் எப்போதாவது சில குறைபாடுகள் (Lapses) நிலவுகின்றன. விதிமுறைகள் பெரும்பாலும் பின்பற்றப்பட்டாலும், கொள்முதல் செயல்முறையின் சில அம்சங்களில் முழுமையான தெளிவு அல்லது செயல்திறன் குறைந்து காணப்படலாம்.
கொள்முதல் செயல்முறைகளில் (Procurement processes) வெளிப்படைத்தன்மையும் நியாயத்தன்மையும் குறைந்து காணப்படுவதுடன், ஆவணப்படுத்தல் அல்லது போட்டித்தன்மை வாய்ந்த விலைமனுகோரல் (Competitive bidding) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் நிலவுகின்றன. மேலும், விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றாமை காணப்படுவதால், இது ஒப்பந்த நிர்வாகத்தில் (Contract management) செயல்திறனற்ற தன்மைக்கும் பொறுப்புக்கூறல் குறைபாட்டிற்கும் வழிவகுக்கிறது.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலான வலுவான ஆளுகை மற்றும் தெளிவான செயல்பாட்டுக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொருவருக்குமான பணிகள் மற்றும் பொறுப்புகளைத் துல்லியமாக வரையறுக்கவும், கூட்டுப்பணியை (Collaboration) ஊக்குவிக்கவும், நிறுவனத்தின் விழுமியங்கள் மற்றும் இலக்குகளுக்கு இணக்கமான முறையில் செயல்பாடுகள் அமைவதை உறுதி செய்யவும் நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவம், வணிக நெறிமுறைகள் (Ethical practices) மற்றும் நிறுவனச் செயல்முறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
The organisation has a well-defined governance structure with clearly outlined roles and responsibilities. Decision-making is transparent, inclusive, and aligned with the organisation’s mission and values. Strong leadership ensures accountability, and operational processes are regularly reviewed for improvement.
நிறுவனம் ஒரு நேர்த்தியான ஆளுகை கட்டமைப்பைக் கொண்டிருப்பதுடன், பணிகள் மற்றும் பொறுப்புகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. முடிவெடுக்கும் செயல்முறைகள் வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நிறுவனத்தின் நோக்கம் மற்றும் விழுமியங்களுடன் இயைந்து காணப்படுகின்றன. வலுவான தலைமைத்துவம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதுடன், செயல்பாட்டு முறைகள் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகத் சீரான இடைவெளியில் மீளாய்வு செய்யப்படுகின்றன. இதன் மூலம் நிறுவனத்தின் நாணயம் (Integrity) மற்றும் திறன்மிக்க செயல்பாடுகள் நிலைநிறுத்தப்படுகின்றன.
நிறுவனத்தின் ஆளுகைக் கட்டமைப்பு தெளிவற்றதாக அல்லது முறையான வரையறையற்று காணப்படுவதுடன், பணிகள் மற்றும் பொறுப்புகளில் தொடர்ச்சியான தெளிவற்ற நிலை நிலவுகிறது. முடிவெடுக்கும் செயல்முறைகள் சீரற்றதாகவும் அல்லது வெளிப்படைத்தன்மை அற்றதாகவும் இருப்பதுடன், தலைமைத்துவத்தின் பொறுப்புக்கூறல் மிகவும் பலவீனமாக உள்ளது. செயல்பாட்டு முறைகள் செயல்திறனற்றவையாக அல்லது நடைமுறைக்கு ஒவ்வாதவையாக காணப்படுவதால், அவற்றைச் சீரமைக்கப் பாரிய அளவிலான மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
அபாய மதிப்பீடானது 1–6 வரையான அளவுகோலைப் பயன்படுத்துவதால், இந்த வழிகாட்டியானது விகிதாசாரத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது சிறிய அல்லது குறைந்த வளங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதை சாத்தியமாக்குவதுடன், பலப்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் கண்டறியவும் உதவுகின்றது.
கட்டமைப்புகள் நடைமுறையில் உள்ளன, ஆனால் அவை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். சில சீரற்ற தன்மைகள் அல்லது இடைவெளிகள் காணப்பட்டாலும், அவை நிறுவனத்தின் அடிப்படை வீழ்ச்சியாக கருதப்படமாட்டாது. போதிய ஆதரவு, கண்காணிப்பு அல்லது இயலுமையை மேம்படுத்தல் மூலம் இத்தகைய அபாயங்களைக் குறைக்க முடியும்.
கட்டமைப்புகள் அல்லது கட்டுப்பாடுகள் இருப்பதற்கான சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன. நடைமுறைகள் சீரற்றவையாகவும், ஆவணப்படுத்தப்படாதவையாகவும் அல்லது தெளிவற்றவையாகவும் காணப்படுகின்றன. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் அபாயங்களைக் குறைப்பதற்கும் பாரிய அளவிலான ஆதரவு அல்லது வழிகாட்டல் அவசியமாகின்றது.