ENGLISH
  • English
  • Tamil
  • Sinhala
frequently asked questions page banner of Neelan Tiruchelvam Trust

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

NTT நிதிக்கொடைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் யார்?

நாம் பரந்துபட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கு ஆதரவளிக்கின்றோம். குறிப்பாக, சமூக மட்டத்திலான அமைப்புகள், பெண்கள் மற்றும் இளைஞர் தலைமைத்துவக் குழுக்கள் மற்றும் விளிம்புநிலை அல்லது ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவோருக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கின்றோம்.

 

இலங்கையில் இலாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட அமைப்புகளுக்கே நிதிக்கொடைகள் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய நன்கொடையாளர்களிடம் நிதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தபோதிலும், மக்கள் மத்தியில் வலுவான சமூக அங்கீகாரத்தைக் கொண்டுள்ள புதிய மற்றும் வளர்ந்து வரும் அமைப்புகளின் விண்ணப்பங்களை நாங்கள் வரவேற்கிறோம்.

  • நிறுவனச் செயல்பாட்டு நிதி
  • செயற்திட்ட நிதிக்கொடைகள்
  • சிறிய நிதிக்கொடைகள்
  மேலதிக தகவல்களுக்கு நிதிக்கொடை வகைகள் என்பதைப் பார்க்கவும்.
எமது நிதிக்கொடை வழங்கும் நடைமுறையானது பின்வரும் கருப்பொருள்களில் கவனம் செலுத்துகின்றது :
  • பொருளாதார நீதி | பாலின நீதி | சட்டப் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை 
  •  குடியுரிமை | பொது நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் 
  • ஆரோக்கிய சமநிலை | இயலாமையுடையவர்களின் உரிமைகள் | நலன்பேணல்
  • சகவாழ்வு  | கதைக்கூற்று | அறிவுசார் தேடல் 
  • புதிதாக உருவெடுத்துவரும் சவால்கள்  | நட்புறவு 
  மேலதிக விபரங்களுக்கு எமது பணிகள் பகுதியைப் பார்க்கவும்.

நாங்கள் பங்கேற்பு மற்றும் விழுமியங்கள் சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றுகின்றோம். திட்ட முன்மொழிவுகள் அவற்றின் தொழில்நுட்பத் தகுதிகளுக்காக மட்டுமன்றி, சமூகங்களுடனான அவற்றின் தொடர்பு, உள்ளடக்கிய தன்மை மற்றும் விளிம்புநிலை மக்களின் குரல்களுக்கு அதிகாரத்தை மாற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. எமது மதிப்பீட்டு அளவுகோலானது, நன்கொடையாளர்களைக் கவரக்கூடிய மெருகூட்டப்பட்ட மொழியை விட, அந்த நிறுவனங்கள் சார்ந்த சமூகப் பாதிப்புறு நிலை, நிதியுதவி பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் NTT-இன் விழுமியங்களுடன் அவை கொண்டுள்ள இணக்கம் ஆகியவற்றிற்கே முன்னுரிமை அளிக்கின்றது.

இல்லை. சிறிய அளவிலான  அடிமட்ட  சமூக  அமைப்புகளே (Grassroots organisations) பெரும்பாலும் தமது சமூகங்களுடன் மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளன என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். முறையான அதிகாரத்துவக் கட்டமைப்புகளை விட, அந்தந்தச் சமூகங்களின் நேரடி அனுபவங்களுக்கும் (Lived experience) சமூக அங்கீகாரத்திற்கும் (Community legitimacy) நாங்கள் அதிக மதிப்பளிக்கின்றோம். அத்துடன், நிதியுதவியுடன் சேர்த்து அத்தகைய அமைப்புகளின் இயலுமையை வலுப்படுத்துவதற்கான (Capacity-strengthening) ஆதரவையும் நாங்கள் வழங்குகின்றோம்.

 

நிதிக்கொடைக்கான கோரிக்கைகளை (Call for proposals) NTT வெளியிடும்போது, அந்தந்த நிதிக்கொடைகளின் அளவுகள் (Grant sizes) குறிப்பிடப்படும்.

 

ஒரு நிறுவனத்தின் தேவைகள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் பணியின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப, நிதிக்கொடைகளின் அளவும் கால அளவும் மாறுபடும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். NTT நிறுவனமானது, ஒருமுறை மட்டும் வழங்கப்படும் குறுகிய காலத் திட்ட நிதிக்கு (One-off funding) முன்னுரிமை அளிக்காமல், சாத்தியமான எல்லா இடங்களிலும் நெகிழ்வுத்தன்மை கொண்ட நீண்டகால ஆதரவை (Long-term support) வழங்குவதற்கே முன்னுரிமை அளிக்கின்றது.

நிதிக்கொடைக்கான கோரிக்கைகள் (Calls for proposals) எமது இணையதளத்தில் அறிவிக்கப்படுவதுடன், சிவில் சமூக வலைப்பின்னல்கள் ஊடாகவும் பகிரப்படும். விண்ணப்பதாரர்கள் NTT நிறுவனத்தினால் வழங்கப்பட்ட படிவங்களையே (Formats) பயன்படுத்த வேண்டும். விண்ணப்பங்கள் ஆங்கிலம் அல்லது சிங்களம் அல்லது தமிழ் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகின்றன.

 

மேலதிக விபரங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை பகுதியைப் பார்க்கவும்.

 

எமது நிதிக்கொடைகள் இலங்கையில் இலாப நோக்கற்ற அமைப்பாகப் (Not-for-profit registration) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

 

ஆம். நாங்கள் வெறும் நிதியுதவி வழங்கும் நிறுவனம் (Grantmaker) மட்டுமல்ல. அமைப்புகளின் ஆற்றலை வலுப்படுத்துவதில் நாங்கள் முதலீடு செய்வதுடன், கருத்தாடல் மற்றும் கற்றலுக்கான களங்களை உருவாக்குகின்றோம். எமது பங்காளர்களை விரிவான வலைப்பின்னல்களுடன் இணைப்பதுடன், அவர்களின் குரல்களைத் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஓங்கி ஒலிக்கச் செய்கின்றோம்.

நாங்கள் ஒரு கலப்பு நிதியளிப்பு முறையை (Hybrid grantmaking model) பின்பற்றுகின்றோம். இம்முறையானது பாரம்பரிய நன்கொடையாளர் நடைமுறைகளையும், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிதியளிப்பு (Trust-based grantmaking) முறையையும் ஒன்றிணைக்கின்றது. நாங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மதிப்பதோடு, அதேவேளை மிகக்கடுமையான விதிமுறைகள் (Rigid compliance) அடிமட்டச் செயல்பாட்டாளர்களைப் புறந்தள்ளிவிடக்கூடும் என்பதையும் உணர்ந்துள்ளோம்.   எனவே, இந்தக் கலப்பு முறையானது நிறுவங்களின் அறிவு மற்றும் அவர்களின் வாழ்க்கை யதார்த்தங்களின் மீது நம்பிக்கை வைக்கும் நெகிழ்வான செயல்பாடுகளையும், அதேநேரம் நிதி மேற்பார்வை அல்லது முன்னேற்ற மீளாய்வு போன்ற பாரம்பரியக் கருவிகளின் தெரிவுசெய்யப்பட்ட பயன்பாட்டையும் ஒருங்கிணைக்கின்றது. இந்தச் சமநிலையானது, வளங்களைச் சிறிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்குச் சென்றடையச் செய்வதுடன், NTT மற்றும் அதன் பங்காளர்களுக்கு இடையே ஒரு பகிரப்பட்ட பொறுப்புக்கூறலையும் கற்றலையும் உறுதிப்படுத்துகின்றது. எமது அறிக்கையிடல் நடைமுறைகள் மிகவும் எளிமையானதாகவும், நெகிழ்வானதாகவும், சுயபரிசீலனைக்கு இடமளிப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கே கடுமையான விதிகளுக்குக் கட்டுப்படுவதை விட, கற்றல் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வதற்கே (Learning and adaptation) முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

நாங்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை நேரடியாகக் களப்பணி சூழலுக்கு நகர்த்துகின்றோம். உள்ளூர் அறிவை மையப்படுத்துவதுடன், பிரதான நிதி ஆதாரங்கள் எட்டாத – பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் சமூகங்களுக்கு வளங்களை வழிப்படுத்துகின்றோம். எமது பங்காளர்களுடன் இணைந்து பயணிப்பதையும், பொறுப்புகள், வளங்கள் மற்றும் சவால்களை (Risks) பகிர்ந்து கொள்வதையுமே எமது அடிப்படைப் பணியாகக் கொள்கின்றோம்.

ENGLISH
  • ENGLISH
  • TAMIL
  • SINHALA