நிதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் ஒரே உள்ளூர் நிதிக்கொடை அமைப்பாக நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியம் (NTT) திகழ்கிறது.
வெறுமனே “நிதிக்கொடையாளார்” என்ற வரையறைக்கும் அப்பால், நெருக்கடியான காலங்களில் மக்களுடன் தோளோடு தோள் நின்றும், அடிமட்ட அமைப்புகளில் முதலில் செய்து, ஒடுக்கப்பட்டோரின் குரல்களை நகர்க்கும் சமத்துவமற்ற கட்டமைப்புகளைக் கேள்விக்குட்படுத்தியும் நாம் செயல்படுகிறோம்.
உள்ளூர் தலைமையை வளர்த்தெடுக்கும் உன்னத நோக்கத்துடன் உருவான நாம், இன்று நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் ஜனநாயகச் செயற்பாட்டுத் தளத்தை வலுப்படுத்தும் நூற்றுக்கணக்கான சமூக அடிப்படையிலான, பெண்கள் மற்றும் இளைஞர் முன்னெடுப்புகளுக்குத் துணைநிற்கிறோம்.
நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் ஒரே உள்ளூர் நிதிக்கொடை அமைப்பாக நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியம் (NTT) திகழ்கிறது. வெறுமனே “நிதிக்கொடையாளர்” என்ற வரையறைக்கும் அப்பால், நெருக்கடியான காலங்களில் மக்களுடன் தோளோடு தோள் நின்றும், அடிமட்ட அமைப்புகளில் முதலீடு செய்தும், ஒடுக்கப்பட்டோரின் குரல்களை நசுக்கும் சமத்துவமற்ற கட்டமைப்புகளைக் கேள்விக்குட்படுத்தியும் நாம் செயற்படுகிறோம். உள்ளூர் தலைமையை வளர்த்தெடுக்கும் உன்னத நோக்கத்துடன் உருவான நாம், இன்று நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் ஜனநாயகச் செயற்பாட்டுத் தளத்தை வலுப்படுத்தும் நூற்றுக்கணக்கான சமூக அடிப்படையிலான, பெண்கள் மற்றும.
நம்பிக்கை, ஒத்துணர்வு மற்றும் துணிச்சலான முன்னெடுப்புகள் ஆகியவற்றிலேயே எமது அணுகுமுறை வேரூன்றியுள்ளது. நிதி உதவிகள் கிடைப்பதற்கு அரிதான அல்லது சவால்கள் நிறைந்த களங்களிலும் நாம் கைகோர்ப்பதுடன் அடக்குமுறைகள், மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமூகத்தின் மீண்டெழும் திறனை வளர்த்தெடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளோம். 2024 ஆம் ஆண்டில் DEVEX நிறுவனத்தால் ‘சர்வதேச அளவில் உற்றுநோக்கப்பட வேண்டிய உள்ளூர் அமைப்பு’ என அங்கீகரிக்கப்பட்ட நாம், முடிவெடுக்கும் உரிமையை அடிமட்ட அமைப்புகளிடம் கொண்டு சேர்ப்பதிலும் , இலங்கையின் சிவில் சமூக அமைப்புகள் வெறுமனே நிலைத்திருப்பது மட்டுமல்லாது, சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதிக்கான ஒரு பெரும் சக்தியாகத் தழைத்தோங்குவதை உறுதி செய்வதிலும் உறுதியாக உள்ளோம்.
கூட்டுப்பொறுப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஊடாக, சமூக நீதி மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். சிவில் சமூகம், கல்விசார் நிறுவனங்கள் மற்றும் பரோபகார செயற்பாட்டுக் களம் ஆகியவற்றுடன் மூலோபாய ரீதியாகக் கைகோர்ப்பதன் மூலம்; அறிவு, வளங்கள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்கிறோம். இதன் ஊடாக, நீதியை நிலைநாட்டும் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை மையப்படுத்திய மாற்றங்களை உருவாக்கும் காத்திரமான திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்
கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் ஒரு பன்முக ஆளுமை; தொலைநோக்குச் சிந்தனை கொண்ட சட்ட வல்லுநராகவும், மக்கள் பிரதிநிதியாகவும், ஓர் அமைதிப் பணியாளராகவும் திகழ்ந்து, நீதி, அனைவரையும் உள்ளடக்கியதுமான ஓர் கட்டியெழுப்புவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார் . அரசியலமைப்புச் சட்டத் துறையில் ஆழ்ந்த புலமை கொண்ட அவர், மனித உரிமைகள், சிறுபான்மையினப் பாதுகாப்பு மற்றும் பல்லினத்தன்மை ஆகியவற்றுக்காக அயராது குரல்கொடுத்ததோடு, கண்ணியம் மற்றும் சமத்துவத்தில் வேரூன்றிய அமைதியை நோக்காகக் கொண்டு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ஜனநாயக சீர்திருத்தங்களையும் இனநல்லிணக்கத்தையும் முன்னெடுப்பதில் உறுதியுடன் செயற்பட்டார்.
பாராளுமன்றில் நீலன் அவர்கள் ஆற்றிய மிகவும் காத்திரமான உரையொன்றில் , ‘உயிரின் மகத்துவம்’ (Sanctity of life) என்பதே மிக அடிப்படையான விழுமியம் என்றும், அது இல்லாத ஏனைய அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் அர்த்தமற்றதாகிவிடும் என்றும் பதிவிட்டார் . போர்க்களத்திலோ அல்லது வேறு எங்குமோ நிகழும் மரணங்களைப் புனிதப்படுத்துவதை (Glorification of death) நிராகரித்த அவர், ஜனநாயகம், அமைதி மற்றும் நீதி ஆகியவற்றின் அடித்தளமாக வாழ்வைக் கொண்டாடுமாறும், அதைப் பாதுகாக்குமாறும் இலங்கையை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். 1999ஆம் ஆண்டு அவசரகால நிலைமை குறித்த விவாதத்தின் போது ஆற்றிய இந்த உரை, தேசத்திற்கான ஒரு தார்மீக வழிகாட்டியாக இன்றும் ஒலிக்கிறது. ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது ஆதிக்கத்திலோ அல்லது அதிகாரத்திலோ இல்லை; மாறாக, மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதிலும், அச்சமும் வன்முறையுமற்ற சூழலில் ஒவ்வொரு தனிநபரும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதிலுமே தங்கியுள்ளது என்பதை இந்த வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
சித்தி சுபஹனியா திருச்செல்வம் அவர்கள் ஒரு தலைசிறந்த சட்டத்தரணியாகவும் தனியார் தொழில்துறை அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளையும் வகித்தார். அவர் தனது கணவர் நீலனுடன் இணைந்து ‘திருச்செல்வம் அசோசியேட்ஸ்’ (Tiruchelvam Associates) எனும் முதன்மையான சட்ட நிறுவனத்தை நிறுவியதுடன், அதன் முகாமைத்துவ பொறுப்புக்களையும் வகித்தார். . வணிக சட்டம், தொழிலாளர் சட்டம், வரி மற்றும் ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற அவர், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கலதாரி ஹோட்டல்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளிலும் அங்கத்துவம் வகித்துச் சேவையாற்றினார்.
சித்தி சுபஹனியா அவர்களின் பெரும் அர்ப்பணிப்பு மனித உரிமைகள் மற்றும் புலமைசார் ஈடுபாடுகளில் அவர் காட்டிய தளராத உறுதியாகும். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இளம்தலைவர்கள் ஒன்றிணைந்து, தங்களை அறிந்துகொள்வதற்கும், ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கான புலமைசார் நெறிப்படுத்தல்களுக்கும் ஒரு தனித்துவமான தளத்தை அவர் அமைத்துக்கொடுத்தார். 2000ம் ஆண்டு, குறிப்பாக , நீலன் திருச்செல்வம் அவர்களின் மறைவிற்குப் பிற்பாடு , இலங்கையில் அமைதி, மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகிய அவரது இலட்சியப் பணிகளைத் தொடர்வதற்காக ‘நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தை’ (NTT) சித்தி சுபஹனியா நிறுவினார். நாடு வெறும் சம்பிரதாயபூர்வமான பரோபகாரப் பணிகளைத் தாண்டி, சமூக யதார்த்தங்களில் ஆழமாக வேரூன்றியதும், ‘உயிரின் மகத்துவம் ‘ எனும் விழுமியத்தால் வழிநடத்தப்படுவதுமான ஒரு சுயாதீனமான, சுதேசிய நிதிக்கொடை வழங்கும் அமைப்பினை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்திருந்தார்.