English
  • English
  • Tamil
  • Sinhala
NGO governance structure chart showing organizational hierarchy

எமது ஆளுகை

எமது ஆளுகை

நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை

Board of Trustees

அம்பிகா சத்குணநாதன் ஒரு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஆவார். அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராகப் பணியாற்றியதோடு . அங்கு அவர் நாட்டின் முதல் தேசிய சிறைச்சாலை தொடர்பான ஆய்வை உருவாக்கி வழிநடத்தினார். மேலும், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தில் சட்ட ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார்.

அவரது ஆய்வு / பரிந்துரை /  செயல்வாதம் ஆகியவை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் / அது சார்ந்த கொள்கை, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வு, இடைக்கால நீதி, தடுப்புக்காவல் வன்முறை, சிறைச்சாலை மற்றும் தண்டனைச் சட்ட கொள்கை, இராணுவமயமாக்கல் மற்றும் பாலினம். போன்ற துறைகளை உள்ளடக்கியவையாகும்.

அவர் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. தன்னார்வ நிதியத்தின் (UN Voluntary Trust Fund for Victims of Torture) பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், சிறைச்சாலை மற்றும் தண்டனைச் சீர்திருத்தத்திற்கான சர்வதேச அமைப்பு (Penal Reform International) உறுப்பினர் குழுவிலும், ‘குளூனி அமைப்பின் விசாரணை கண்காணிப்பு திட்டம்’ (Clooney Foundation Trial Watch Project) நிபுணர் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.

மேலும் , அவர் Urgent Action Fund Asia & Pacific அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராகவும் துணைத் தவிசாளராகவும் பணியாற்றியுள்ளார் .

அம்பிகா சற்குணநாதன்

தவிசாளர்

சன்ன டி சில்வா அவர்கள் சர்வோதய அபிவிருத்தி நிதியத்தின் (Sarvodaya Development Finance) தலைவராகவும், கெப்பிட்டல் மீடியா (Capital Media) நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் விளங்குகிறார். இவர் சமிட் பினான்ஸ் பிஎல்சி (Summit Finance PLC) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் (Managing Director), டெல்மேஜ் குழுமத்தின் (Delmege Group Limited) குழும முகாமைத்துவப் பணிப்பாளராகவும் (Group Managing Director) பணியாற்றியுள்ளார். மேலும், இவர் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (Securities and Exchange Commission – SEC) பணிப்பாளர் நாயகமாகவும் (Director General), இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment – BOI) நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் (Executive Director) பதவி வகித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் (Harvard University) பொதுக் கொள்கைக்கான எட்வர்ட் எஸ். மேசன் உறுப்பினரான (Edward S. Mason Fellow in Public Policy) இவர், ஹார்வர்ட் கென்னடி பாடசாலையின் (Harvard Kennedy School) கற்பித்தல் உறுப்பினராகவும் (Teaching Fellow) அங்கம் வகித்துள்ளார்.இவர் பட்டய முகாமைத்துவ கணக்காளர் சங்கத்தின் (Chartered Institute of Management Accountants – CIMA) மற்றும் பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர் சங்கத்தின் (Association of Chartered Certified Accountants – ACCA) ஒரு கௌரவ உறுப்பினராவார். . அத்துடன் பட்டய பிணையங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் (Chartered Institute of Securities & Investment – CISI) உறுப்பினராகவும், பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர் சங்கத்தின் (ACCA) இலங்கை வலையமைப்புக் குழுவின் (Sri Lanka Member Network Panel) சபை உறுப்பினராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.

சன்ன டி சில்வா

கலாநிதி பர்சானா ஹனீஃபா அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் ஒரு பேராசிரியராகவும் , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  ஓர் ஆணையாளராகவும்  விளங்குகிறார். இவர் நியூயோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் கலாநிதி  பட்டத்தைப் பெற்றார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தில் (2018/19) பொதுநலவாய ஆய்வுகளுக்கான வருகைதரு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அத்துடன், இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் செயலணியிலும்  இவர் பணியாற்றியுள்ளார். 

பேர்லினிலுள்ள ‘லைபினிஸ் சென்ட்ரம் மாடர்னர் ஓரியண்ட்’ (Leibniz Zentrum Moderner Orient) நிறுவனத்தின் வருகைதரு ஆய்வு உறுப்பினராகப்  பணியாற்றிய இவர், சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின்  முகாமைத்துவப் பேரவையிலும் மற்றும் ‘சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை (Law and Society Trust) சபையிலும் உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.

கலாநிதி பர்சானா ஹனீஃபா

மிராக் ரஹீம் அவர்கள், காணாமற்போனவர்கள்  பற்றிய அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) ஆணையாளராக (Commissioner) தனது இரண்டாவது பதவிக்காலத்தை 2025 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்தார். முன்னதாக 2018 முதல் 2021 வரை அதன் ஸ்தாபக ஆணையாளராகப் பணியாற்றியிருந்தார். மனித உரிமைகள் மற்றும் இடைக்கால நீதி (Transitional Justice) துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், அண்மைக்காலமாக காணாமற்போதல் மற்றும் குறிப்பாக மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தென்னாப்பிரிக்காவின் காணாமற்போனோர் பணிக்குழு , குவாத்தமாலாவின் FAFG, சைப்பிரஸின் CMP மற்றும் நெதர்லாந்தின் ICMP போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கான பயிற்சி மற்றும் களப்பயணங்களை முன்னெடுத்தவர். மேலும், இவர் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான ஆலோசனைச் செயலணியின் (Consultation Task Force on Reconciliation Mechanisms) உறுப்பினராகவும், மீள்குடியேற்ற அமைச்சிற்காக ‘மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிலையான தீர்வுகள் குறித்த தேசியக் கொள்கையை’ (National Policy on Durable Solutions for Conflict-Affected Displacement) வரைவு செய்வதில் ஒரு தேசிய ஆலோசகராகவும் (National Consultant) பணியாற்றியுள்ளார்

மிராக் ரஹீம்

டாக்டர் பிரமீளா சேனநாயக்க அவர்கள்  சர்வதேசப் பெற்றோர் நலத் திட்ட சம்மேளனத்தின் (International Planned Parenthood Federation – IPPF) உதவி பணிப்பாளர் நாயகமாக 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது தாய்லாந்தின் பேங்கொக்கிலுள்ள Concept Foundation  அமைப்பின் தவிசாளராகவும் , இலங்கையின் களுத்துறையில் 800-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்குக் கல்வியையும், சுனாமியின் பின்னரான காலப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளையும் வழங்கிவரும் Educate a Child Trust எனும் நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் விளங்குகிறார். மேலும், இவர் அமெரிக்காவின் Family Health International  மற்றும் WaterAid UK ஆகிய நிறுவனங்களின் சபை உறுப்பினராகவும்  பணியாற்றி வருகிறார்.

டாக்டர் பிரமிளா சேனநாயக்க

ஷெஹாரா டி சில்வா அவர்கள் பல உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளின் வெற்றிக்கு வித்திட்ட ஒரு சர்வதேச சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் நிபுணராவார்.  இவர் தற்போது சிலிக்கான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப புத்தாக்கத் தொழில் முயற்சிநிறுவனமான  Emojot அமைப்பின் சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாயத்திற்கான உப தலைவராகப்  பணியாற்றி வருகிறார்.  இதற்கு முன்னர் இவர் பல Omnicom நிறுவனங்களின் குழும மூலோபாயத் தலைவராகவும் , உலகின் மிகப்பெரிய வர்த்தக நாம ஆலோசனை நிறுவனமான Interbrand KL அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் ILO,  USAID, PLAN International உள்ளிட்ட அபிவிருத்தித் துறை சார்ந்த அமைப்புகளுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தற்போது இவர் Keels Foods,  Environmental Foundation The Music Project மற்றும் Family Planning Association of Sri Lanka) ஆகியவற்றின் சபை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

ஷெஹாரா டி சில்வா

நிகழ்ச்சித்திட்ட உபகுழு

மிராக் ரஹீம்
தலைவர்
அம்பிகா சற்குணநாதன்
பர்சானா ஹனீஃபா
ஷெஹாரா டி சில்வா

நிதி மற்றும் முதலீட்டு உபகுழு

சன்ன டி சில்வா
தலைவர்
அம்பிகா சற்குணநாதன்
பிரமிளா சேனநாயக்க

ENGLISH
  • ENGLISH
  • TAMIL
  • SINHALA
ENGLISH
  • ENGLISH
  • TAMIL
  • SINHALA
ENGLISH
  • ENGLISH
  • TAMIL
  • SINHALA